For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இழுபறி? நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ கட்சிகள் ஒப்பந்தம்!

09:54 AM Feb 22, 2024 IST | Web Editor
பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இழுபறி  நவாஸ் ஷெரீப்   பிலாவல் பூட்டோ கட்சிகள் ஒப்பந்தம்
Advertisement

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்,  பிலாவல் பூட்டோவின் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

Advertisement

பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சிக்கும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும்  இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!

இது குறித்து ஷாபாஸ் ஷெரீஃபும், பிலாவல் புட்டோ ஜர்தாரியும் பிப் - 20 ஆம் தேதி நள்ளிவரவு கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

"புதிய அரசில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. அந்த அரசில் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவி வகிப்பார். அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் பொது வேட்பாளராக பிபிபி கட்சியின் துணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரி நிறுத்தப்படுவார்" என்று தெரிவித்தனர்.

கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள்தான் மிக அதிக இடங்களைக் கைப்பற்றினர். இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப்போவதில்லை என்று இம்ரான் தெரிவித்தார்.

இதையடுத்து, 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்த பிஎம்எல்-என் கட்சியும், பிபிபி கட்சியும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. இருந்தாலும், இது தொடர்பாக பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில்,இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

Tags :
Advertisement