For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மொரீசியஸ் புதிய பிரதமராக பதவியேற்கும் நவீன் ராம்கூலம்!

07:10 AM Nov 12, 2024 IST | Web Editor
மொரீசியஸ் புதிய பிரதமராக பதவியேற்கும் நவீன் ராம்கூலம்
Advertisement

மொரீசியஸ் நாட்டின் புதிய பிரதமராக நவீன் ராம்கூலம் பதிவியேற்கிறார்.

Advertisement

இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடு மொரீஷியஸ். இந்த நாட்டில் நவ.10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளு அறிவிக்கப்பட்டது.

அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான - பார்டி டிராவைலிஸ்ட்(பிடி'ஆர்') மற்றும் மொரீஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக மொரீசியஸ் பிரதமராக பதவியேற்கிறார்.

இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் போட்டி | யு மும்பை அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி!

இந்நிலையில், மொரிஷியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நவீன் ராம்கூலம்த்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement