For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#NationalFilmAwards | சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகை - நித்யா மேனன், மானசி பரேக்!

03:13 PM Aug 16, 2024 IST | Web Editor
 nationalfilmawards   சிறந்த நடிகர்   ரிஷப் ஷெட்டி  சிறந்த நடிகை   நித்யா மேனன்  மானசி பரேக்
Advertisement

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர் விருதை ரிஷப் ஷெட்டி பெற்றார், சிறந்த நடிகை விருதை நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் வென்றனர்.

Advertisement

மத்திய‌ அரசு கடந்த 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) 2022 ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. பல முக்கியமான திரைப்படங்கள் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றன. சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : "அமெரிக்காவில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இருப்பேன்" - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்! 

70வது விருது வென்றவர்களின் பட்டியல் இதோ :

சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த நடிகை - நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்), மானசி பரேக்

சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜத்யா (உஞ்சாய்)

சிறந்த துணை நடிகை - நீனா குப்தா

சிறந்த துணை நடிகர் - பவன் மல்ஹோத்ரா

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் -  காந்தாரா (கன்னடம்)

சிறந்த அறிமுகம் - ஃபௌஜா, பிரமோத் குமார்

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியன் செல்வன் 1

சிறந்த கன்னட திரைப்படம் - 'கே.ஜி.எஃப் 2'

சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளக்கா சிசி 225/2009

சிறந்த ஒடியா திரைப்படம் - தமன்

சிறந்த இந்தி திரைப்படம் - குல்மோகர்

சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

சிறந்த பஞ்சாபி திரைப்படம் - பாகி டி டீ

சிறந்த மராத்தி திரைப்படம் - வால்வி

சிறப்பு குறிப்புகள்:

மனோஜ் பாஜ்பாய் - குல்மோஹர்

சஞ்சய் சலில் சௌத்ரி - காளிகான்

தொழில்நுட்ப விருதுகள்:

சிறந்த சண்டை காட்சி - அன்பறிவு (KGF 2)

சிறந்த நடன இயக்குநர் - ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காதா)

சிறந்த பாடல் வரிகள் - ஃபௌஜா

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் ( பொன்னியின் செல்வன் -1)

சிறந்த ஒப்பனை - அபராஜிதோ

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - அபராஜிதோ

சிறந்த எடிட்டிங் -  ஆட்டம்

சிறந்த ஒலி வடிவமைப்பு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1

சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மல்லிகாபுரம்)

சிறந்த பின்னணிப் பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ (சாயும் வெயில் - சவுதி வெள்ளக்கா)

சிறந்த பின்னணிப் பாடகர் - அர்ஜித் சிங் (கேசரியா - பிரம்மாஸ்த்ரா)

சிறந்த ஆவணப்படத்திற்கான விருது - ‘Murmurs of the Jungle’ (சோஹில் வைத்யா )

Tags :
Advertisement