Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேசிய மருத்துவர்கள் தினம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11:14 AM Jul 01, 2025 IST | Web Editor
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்தியாவில் ஜூலை 1ம் தேதி, தேசிய மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் 'தேசிய மருத்துவர் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள்!

தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERDoctorsgreetingsIndiaM.K. StalinNational Doctors Daytrending
Advertisement
Next Article