For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
03:22 PM Aug 18, 2025 IST | Web Editor
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி பி  ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்
Advertisement

நாட்டின் துணை ஜனாதிபதியும் இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது.இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது  துணை ஜனாதிபதி பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது. மேலும்தேர்தல் அட்டவணையையும் கடந்த 7-ந்தேதி வெளியிட்டது. அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவர்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் " சி.பி. ராதாகிருஷ்ணனனை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது நீண்ட ஆண்டு பொது சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும். அவர் எப்போதும் காட்டிய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்யட்டும்."  என்று தெரிவித்துள்ளார். மேலும் அவருடனான புகைபடத்தையும் பகிர்ந்துள்ளார்.

Tags :
Advertisement