பெரியார் சிலையை அவமதித்த நாதக நிர்வாகி அதிரடி கைது!
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நேற்று மாலை இளைஞர் ஒருவர் காலணியை வீசினார். மேலும, அவர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததுடன் அந்த இளைஞரை பிடித்து, குமரன் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!
போலீசார் நடத்திய விசாரணையில், காலணி வீசியது ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் அஜய் (வயது 32) என தெரியவந்தது. பெரியார் சிலை மீது இளைஞர் காலணி வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்து விமர்சித்தது சர்ச்சையானதும், அவர் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பெரியார் சிலையை அவமதிப்பு செய்த சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், அந்த மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதோடு, குண்டர் சட்டத்தின் கீழ் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.