For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

12:37 PM Feb 19, 2024 IST | Web Editor
தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா   நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Advertisement

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா திட்டம் செயல் படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில்,  கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார்.  அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா திட்டம் செயல் படுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags :
Advertisement