For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Nasrallah | “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

02:59 PM Sep 28, 2024 IST | Web Editor
 nasrallah   “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு”   இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
Advertisement

லெபனானில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Advertisement

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இத்தகைய தொழில்நுட்பத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், லெபனானின் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நேற்று இரவு நஸ்ரல்லா மறைவிடத்தை தாக்கியதாக, இஸ்ரேல் அறிவித்தபோது, நஸ்ரல்லா நலமுடன் இருப்பதாக ஹிஸ்புல்லா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement