For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை - 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!

டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
06:59 PM Jul 27, 2025 IST | Web Editor
டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை   3 850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்
Advertisement

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேசன் அல்லது சுருக்கமாக நாசா என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும். 1958ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஏராளமான விண்ணியல் ஆய்வுகளில் சாதனை புரிந்து வருகிறது. இதில்  சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்பின் பல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை நாசாவில், ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்க நேரிடலாம் . அதாவது சுமார் 3,870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நாசா ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதைவிட எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement