For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 34 ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

02:32 PM Feb 26, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் 34 ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்   காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Advertisement

தமிழ்நாட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 34 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் காணொலி காட்சி வாயிலாக  பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 

Advertisement

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது,  இலவச வைபை வசதி,  காத்திருப்பு அறை,  மின்தூக்கி,  மின்படிக்கட்டு, உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடை அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.  நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : “அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின்பேரில் வளமான கூட்டணி” – அண்ணாமலை பேட்டி

இந்நிலையில், முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.  இதையடுத்து, 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 553 ரயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று  தொடங்கி வைத்தார்.

முன்னதாக,  தமிழ்நாட்டில் ரூ.4,100 கோடியில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 18 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  மேலும், 2-ம் கட்டமாக சென்னை கடற்கைரை, பூங்கா,  அம்பத்தூர்,  பரங்கிமலை,  கிண்டி,  மாம்பலம்,  மேட்டுப்பாளையம்,  கோவை வடக்கு,  ஈரோடு,  மொரப்பூர்,  திண்டுக்கல்,  தூத்துக்குடி,  திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம்,  விருத்தாச்சலம், தருமபுரி,  ஒசூர் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான தொடக்கப் பணிகள் இன்று நடைபெற்றது.  இதனை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Tags :
Advertisement