For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு - 'ஒரு கவுன்சிலர் கூட இல்லை!'"

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் திமுக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
06:02 PM Aug 30, 2025 IST | Web Editor
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் திமுக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
 நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு    ஒரு கவுன்சிலர் கூட இல்லை
Advertisement

Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் ஏற்பாடு செய்திருந்த விழாவில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, பெண்களுக்குச் சேலை மற்றும் மஞ்சள் குங்குமம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் பேசுகையில், "இந்து மதத்தில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நம்முடைய தந்தையாக வணங்கினாலும், முழுமுதற் கடவுளாக விநாயகரைத்தான் வழிபடுகிறோம். குறிப்பாக, தென் மாநிலங்களில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்ததாகக் கூறுகிறார். ஆனால், அது தொடர்பான விவரங்களை ஒரு வெள்ளையறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.தமிழக முதல்வர் ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என்று கூறியதாகச் சொல்கிறார்கள். ஆனால், எந்த மாதிரியான மாற்றம் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும். ஏற்றுமதி வரி விதிப்பு என்பது சர்வதேசப் பிரச்சினை. அமெரிக்காவின் டிரம்ப் விதித்த வரியால் அவர்களுக்கும் பாதிப்பு உண்டு. திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கும் பாதிப்பு உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்றுமதியாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அந்நிய நாட்டினால் நம் நாட்டுக்குப் பிரச்சினை வரும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நிற்க வேண்டும். எதிரி நாட்டுடன் சேர்ந்து குளிர் காய்வது கூடாது. முதல்வர் மனுக்களை வாங்கினால் அது குப்பையில் போடப்படுவதுதான் திராவிட மாடல் என்று மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

திருப்பூரில் சொத்து வரி 300% அதிகரித்துள்ளது. கோவையை விட திருப்பூரில் 16% அதிகம். ஏற்றுமதியாளர்களுக்கு சொத்து வரியைக் குறைப்பது, மின் கட்டணத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல், போராட்டம் நடத்துவதாகச் சொல்வது சரியல்ல.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "இன்னும் ஒரு கவுன்சிலர், எம்.எல்.ஏ கூட ஆகாமல், விஜய் எல்லோரையும் தோற்கடிப்போம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது" என்று விமர்சித்தார்.

Tags :
Advertisement