தொடரும் அலுவலக உயிரிழப்புகள் | அலுவலகக் கழிப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்த #ITemployee!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அலுவலகக் கழிப்பறையில் ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக, பல அலுவலகங்களில் பணிநேரங்களில் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாய்லாந்தில் செப்.13ம் தேதியில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர், உடல்நிலை சரியில்லாததால், மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், மேலாளர் விடுப்பு தராததையடுத்து, அலுவலகம் வந்த ஊழியர், அலுவலகம் வந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து,லக்னௌவில் செப். 24ம் தேதியில், எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியர் ஒருவர், அலுவலகத்தில் பணிநேரத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், ஜூலை மாதத்தில் புனேவில் எர்ன்ஸ்ட் அன் யங் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரும் பணி அழுத்தத்தால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் | பின்னடவை சந்திக்கும் #NewZealand அணி!
இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஒரு முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிதின் எட்வின் மைக்கேல் என்பவர் கடந்த 27ம் தேதி தனது அலுவலக கழிப்பறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நேரமாகியும் பணியிடத்திற்கு எட்வின் வராததால், சக பணியாளர்கள் சந்தேகமடைந்து, கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோது, எட்வின் கீழே கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், எட்வின் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.பின்னர் எட்வின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் அலுவலகத்தில் நிகழும் உயிரிழப்புகள் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.