For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேளாங்கண்ணியில் களைக்கட்டும் கிறிஸ்துமஸ் விழா - ஏராளமானோர் பங்கேற்பு!

08:03 AM Dec 25, 2023 IST | Web Editor
வேளாங்கண்ணியில் களைக்கட்டும் கிறிஸ்துமஸ் விழா   ஏராளமானோர் பங்கேற்பு
Advertisement

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisement

கிறிஸ்துமஸ் விழா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

பின்னர் விவிலியத்தில் இருந்து திருவாசகங்கள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர். இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவை பேராலய நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement