இளைஞர் மரணத்தில் மர்மம் - உறவினர்கள் சரமாரியான கேள்வி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகாபுரி சொக்கநாதபுரம் வலையர் தெருவை சேர்ந்த கருப்பையா (வயது 25) நேற்று காரைக்குடி மின்சார வாரிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஒரு புது வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி பலியானதாக கருப்பையா வேலை பார்க்கும் முதலாளி முகமது யாசின் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அழகாபுரியிலிருந்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு சாவில் மர்மம் உள்ளதாக தலைமை எலக்ட்ரீசியன் முகமது யாசின் மற்றும் பொறியாளர் மன்சூர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை காரைக்குடி வடக்கு காவல் நிலையம் சென்று வழக்குப் பதிவு செய்த எஃப் ஐ ஆர் காப்பியை வாங்கி வருவதற்குள் அவரது பெற்றோரிடம் கூட கையெழுத்து பெறாமல் கருப்பையா உடலை மருத்துவர்கள் உடல் கூறு ஆய்வு செய்துவிட்டதாகவும் இறப்பில் மர்மம் உள்ளது என்று புகார் அளித்தனர்.
மேலும் அவசர அவசரமாக உடல் கூறு ஆய்வு எதற்காக செய்தார்கள் என்றும் மீண்டும் உடல் கூறு ஆய்வு வீடியோ கேமரா பதிவுடன் செய்ய வேண்டும் என்றும் இறந்த கார்த்திக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று கூறி கருப்பையா உறவினர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.