For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Mysskin | மீண்டும் கதாநாயகனாகும் மிஷ்கின்?

12:44 PM Oct 10, 2024 IST | Web Editor
 mysskin   மீண்டும் கதாநாயகனாகும் மிஷ்கின்
Advertisement

இயக்குநர் மிஷ்கின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் மிஷ்கின், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி  நுட்பமான கதைகளை இயக்கி வருபவர்.

இவர் நந்தலாலா படத்தை இயக்கியதுடன் அவரே நாயகனாகவும் நடித்தார். மேலும், சமீபகாலமாக சவரக்கத்தி, மாவீரன், லியோ போன்ற சில படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இறுதியாக, உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கினார். அது, வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, பிசாசு - 2 படத்தை எடுத்தார். ஆனால், 2 ஆண்டுகளாகியும் இப்படம் திரைக்கு வரவில்லை. தற்போது, விஜய் சேதுபதியை வைத்து டிரைன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிஷ்கின் 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குநர் கோகுல் இயக்குகிறார். ‛நந்தலாலா' படத்திற்கு பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Tags :
Advertisement