For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”எனது தாய் அவமரியாதை செய்யப் பட்டுள்ளார்”- பிரதமர் மோடி வேதனை!

எனது தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
08:06 PM Sep 02, 2025 IST | Web Editor
எனது தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
”எனது தாய் அவமரியாதை செய்யப் பட்டுள்ளார்”  பிரதமர் மோடி வேதனை
Advertisement

பீகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் தர்பங்காவில் நடைபெற்ற யாத்திரையின் போது அடையாளம் தெரியாத சிலர் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறுவ் வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக சமூக வலை தளங்களில் வீடியோக்கள் பரவின. இச்சம்வம் பெரும் பேசு பொருளானது. 

Advertisement

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். பீகாரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய,

"அம்மா தான்  நமது உலகம். அம்மாதான்  நமது சுயமரியாதை. பீகாரில் காங்கிரஸ் - ஆர்ஜெடி  மேடையில் என் தாய் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் இது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது என் அம்மாவுக்கு மட்டுமான அவமானம் அல்ல.  நாட்டின்  அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் இது அவமானம்.

இதை கேட்ட பிறகு பீகாரின் ஒவ்வொரு தாயும் எவ்வளவு மோசமாக உணர்ந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் எனக்கு எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு  வலியில் பீகார் மக்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். என் அம்மாவுக்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை, பின்னர் வாக்காளர் யாத்திரையின் போது அவரைப் பற்றி ஏன் பேச வேண்டும்?  இதுபோன்ற அவதூறுகளை வெளியிடுபவர்கள் பெண்கள் பலவீனமானவர் என்று கருதும் மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்”

என்று பேசினார்.

Tags :
Advertisement