"மனசோ இப்போ தந்தியடிக்குது.." - திருமண தேதியை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசியிருந்தார். அதில், “திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்” என தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள் : “அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” – உச்சநீதிமன்றம் கருத்து!
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான ‘யோகி டா’ திரைப்படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனக்கும், நடிகர் விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா அறிவித்தார். இதுகுறித்து மேடையில் பேசிய அவர், தானும், விஷாலும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக அறிவித்தார்.