“என் பேரன்கள் இந்த சிறுவனை போல் இருக்க வேண்டும்” - ஆனந்த் மகிந்திரா நெகிழ்ச்சி!
2022 அர்ஜென்டினா பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் தோற்கடிக்கப்பட்ட கோல்கீப்பரை சிறுவன் ஒருவன் ஆறுதல்படுத்தும் பழைய வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ஒரு சிறுவனின் பழைய வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அர்ஜென்டினா பிரீமியர் லீக் போட்டியில் போகா ஜூனியர்ஸிடம், டிஃபென்சா ஒய் ஜஸ்டிசியா தோல்வியடைந்தது.
அப்போது டிஃபென்சா ஒய் ஜஸ்டிசியாவின் கோல்கீப்பர் எஸெகுவேல் அன்சைனை ஆறுதல்படுத்த்துவதற்காக சிறுவன் ஒருவன் ஓடிவந்து அவரை கட்டியணைத்தான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இந்த சிறுவனைப்போல தனது பேரன்களும் கருணை, நல்ல உள்ளம் கொண்டிருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
This little boy apparently ran on to the pitch after a match to console the losing goalkeeper.
My 2 young grandsons will soon be visiting us & I would wish for nothing more than for them to have hearts as empathetic & large as this kid’s..
pic.twitter.com/fQ3uLbHo97— anand mahindra (@anandmahindra) February 11, 2024
“போட்டியில் தோல்வியடைந்த கோல்கீப்பருக்கு ஆறுதல் சொல்ல இச்சிறுவன் ஆடுகளத்திற்கு ஓடினான். என் இரண்டு பேரப்பிள்ளைகளும் விரைவில் எங்களை சந்திக்க வருவார்கள். அவர்களுக்கும் இந்த சிறுவனைப்போல பெரிய இதயம் இருக்க வேண்டும் என்பதை தவிர வேறொன்றுமில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகள்; ஒரு சிறிய குழந்தையின் இந்த செயல் ஆறுதல் வார்த்தைகளைவிட மேலானது. இதயத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது என பலர் தெரிவித்துள்ளனர்.