"குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்" - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானா பேட்டி!
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து காவல்துறையினர் தண்டனை வாங்கி தர வேண்டும் என சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர்
பகுதியில் தாய்,மகன், பேரன் ஆகிய மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கொலை குற்றத்தில் இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நேற்று நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சுகந்தகுமார் உடன் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் உயிரிழந்த சிறுவனின் தாய் அஞ்சும் சுல்தானாவிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணைக்கு பின் அஞ்சும் சுல்தானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் 16லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை - யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"எனது குழந்தையை நான் இழந்துள்ளேன்.ஒரே கேள்வியை திரும்ப திரும்ப பத்து பேர்
கேட்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். இக்குற்றத்திற்கு காரணமானவர்களை
நிச்சயம் காவல்துறை கண்டுபிடித்து தண்டனை அளிக்க வேண்டும்.உண்மை வெளியில்
வரவேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.