மதுரை முனியாண்டி கோயில் திருவிழா - 5,000 பேருக்கு கம கம பிரியாணி பிரசாதம்!
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவில் சுமார் 5,000 பேருக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையில் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் 89-வது கோயில் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள்: பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கம்? – வெளியான புதிய தகவல்!
இந்த திருவிழாவிற்காக, ஆடுகள் மற்றும் சேவல்களை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்துவர். அந்த வகையில் சுமார் 100-க்கு மேற்பட்ட ஆடுகள், 300 சேவல்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, 2000 கிலோ அரிசியையும் சேர்த்து பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணி, வடக்கம்பட்டி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த 5,000 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.