ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் முன் திருமண வைபவங்களில் பங்கேற்பதற்காக தனது மனைவி பிரிஸ்கில்லா சானுடன் மார்க் ஜுக்கர்பெர்க் பங்கேற்றார்.
முகேஷ் அம்பாணியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி -தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் ஜூலை 12ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கு முந்தையக் கொண்டாட்டங்கள், சடங்குகள் மார்ச் 1 (இன்று) முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு முகேஷ் அம்பாணியின் பெற்றோரின் சொந்த ஊரான குஜராத், ஜாம்நகரில் நடைபெறுகிறது.
அங்குதான் ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட ஆனந்த் அம்பானியின் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் ‘வந்தாரா’ மையம் அமைந்திருக்கிறது. முக்கேஷ் அம்பானியும், அவரது தந்தை திருபாய் அம்பானியும் முதன் முதலில் பிசினஸை ஆரம்பித்த இடம். இதை மனதில் வைத்துதான் இந்த நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெறும் இவ்விழா மிகப் பிரமாண்டாமாக அலங்கரிக்கப்பட்டு கொண்டாட்டத்திற்குத் தயாராகியுள்ளது. இவ்விழாவிற்காக அமிதாப் பச்சன், ஷாருக் கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள், உலக அளவில் இருக்கும் முன்னாள் - இந்நாள் பிரதமர்களுக்கும், தொழிலதிபர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்து கொள்ள தனது மனைவி
பிரிஸ்கில்லா சானுடன் மார்க் ஜுக்கர்பெர்க் பங்கேற்றார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜுக்கர்பெர்க் தங்க நிற டிராகன்ஃபிளைகளுடன் கருப்பு நிற உடையையும், சான் அழகான தங்கப் பூக்கள் கொண்ட கருப்பு நிற ஆடையை அணிந்துள்ளார். பார்ட்டிக்கு தயாரான நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள இன்ஸ்டா கிராம் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
நேற்றைய நிகழ்வில் உலகளவில் பிரபலமான பாப்-ஸ்டார் ரிஹானா பாடல் நிகழ்ச்சி நடந்தது. மூன்று நாட்கள் கோலகலாமாக நடைபெறவுள்ள இவ்விழாவில் கலந்துகொள்ள தோனி, சச்சின், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்வீர் கபூர், ரோஹித் சர்மா, அட்லி, ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வண்ணமிருக்கின்றனர்.
இதற்காக தனி விமானம், உயர் ரக கார்கள், உயர் வசதிகள் கொண்ட தங்கும் மாளிகைகள் என அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் கலந்து கொள்பவர்களை கவனிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் எதைக் கேட்டாலும் அதை மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்து இறக்க வேண்டுமென அம்பானி குடும்பம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரபலங்களின் உடை, ஒப்பனை என அனைத்தையும் கவனித்துக் கொள்ள தனித்தனி ஒப்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.