தமிழ்நாடு சட்டசபைக்கு "கிட்னிகள் ஜாக்கிரதை" என பேட்ச் அணிந்து வந்த அதிமுகவினர்!
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த தொடர்ந்து நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் கூடியது. கூட்டத்தில் கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. இந்த கூட்டத்தில், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்தில் கிட்னி திருட்டு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, 'கிட்னிகள் ஜாக்கிரதை' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். அதேபல், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.