நாளை ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?
ஒவ்வொரு வாரமும் ஒரு சில திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓடிடியிலும் வெளியாகும். அது போல நாளையும் (மார்ச்.21)ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் 'டிராகன்'. இந்த படத்தில் கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை (மார்ச்.21) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை அமேசான் பிரைம் மற்றம் சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
பேபி & பேபி
அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் 'பேபி & பேபி'. இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். குழந்தையை மையப்படுத்தி அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஃபயர்
அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'பயர்'. இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாகர்கோவில் காசி என்பவரின் வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.