For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி "தாய் மாமன் தினம்" கொண்டாட்டம்!

03:49 PM Aug 03, 2024 IST | Web Editor
உசிலம்பட்டி அருகே ஆடிப் பெருக்கையொட்டி  தாய் மாமன் தினம்  கொண்டாட்டம்
Advertisement

உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக 
ஆடி 18-ம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக கொண்டாடினர். 

Advertisement

தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் சீனிப்பால் குழந்தைக்கு முதல் உணவாக
அளிப்பதில் துவங்கி, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம்,
திருமண விழா மற்றும் இறுதியாக இறந்த பின்னும் தாய்மாமன் கொடியாக ஒரு செம்பு
நீரை இறந்த உடலுக்கு ஊற்றி இறுதி மரியாதை செய்த பின்பே நல்லடக்கம் நடைபெறும்,
என்ற வகையில் இன்ப, துன்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு தாய்மாமன் தனது
பங்களிப்பை அளித்து வருகிறார்.

தாய்க்கு நிகராக உள்ள இந்த தாய்மாமனை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கையொட்டி தாய்மாமனுக்கு மரியாதை செய்து,
அவர்களிடம் ஆசி வாங்கும் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் அவர்களை வணங்கி தானியங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த திருவிழா இன்று 8-வது ஆண்டாக உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்ப சாமி கோயிலில் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது.

இதையும் படியுங்கள் : “அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பாதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்” – உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை!

இந்நிகழ்வில் தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, தாய்மாமனிடம்
தானியங்களை  பெற்று ஆடி பெருக்கில் விதை விதைப்பிற்காக எடுத்து
சென்றனர். இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு
பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், தேனி மக்களவை உறுப்பினர்
தங்கதமிழ்ச்செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தென்னிந்திய
பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர்களும்
பங்கேற்று தங்களது தாய்மாமன்களுக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர்.

Tags :
Advertisement