Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீமான் மீது பாய்ந்தது மாதர் சங்கத்தின் புகார்!

மாதர் சங்கத்தை அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசியதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
03:45 PM Jul 16, 2025 IST | Web Editor
மாதர் சங்கத்தை அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசியதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement

 

Advertisement

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

மேலும் அப்புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட  ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ப்போது பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார். மேலும் பல வார்த்தைகளை பேசி இழிவுப்படுத்தியுள்ளார்.

எனவே சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

Tags :
ChennaiNTKPolicePOLITICALSeemanWomensRights
Advertisement
Next Article