For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய், மகள்! வைரலாகும் வீடியோ!

05:19 PM Mar 23, 2024 IST | Web Editor
துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய்  மகள்  வைரலாகும் வீடியோ
Advertisement

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய், மகள் வைரலாகும் வீடியோ!

Advertisement

பெண்கள் கம்பீரமானவர்கள்-ன்னு உலகுக்கு உணர்த்திய பெண் ஆளுமைகள் நிறைய பேர் இந்தியால இருக்காங்க. அன்னைக்கு இன்னைக்கும் இந்தியப் பெண்களுக்கு உலகளவுல வரவேற்பு இருக்கு. வீட்டுல கிள்ளாடிகளாக இருந்த பெண்கள் இப்போ உலக அளவுல கவனம் பெரும் பொறுப்புல இருக்காங்க.,.

ஆனாலும் இன்னமும் திருட்டு, கொலை இந்த மாதிரியான குற்றச்சம்பவங்கள் பெரும்பாலும் பெண்கள மையமா வச்சே நடந்துட்டு வருது. பட்டப்பகல்ல.. கையில துப்பாக்கியோட இரண்டு கொள்ளையர்கள்..  வீட்டுக்குள்ள பூந்துட்டாங்கனா... பெருமாலும் என்ன செய்யனும் நமக்கு இந்த சமூகம் கத்து கொடுத்துருக்கு...  கையில துப்பாக்கிய பாத்தா கொள்ளையர்களுக்கு வேண்டியத குடுத்து அனுப்பிவிட்டுட்டு உயிரைக் காப்பாத்திக்கிறதே முக்கியம். இப்படி தான் புத்திமதி சொல்லுவாங்க..

ஆனால் நாம இப்போ பாக்கப்போற தாய், மகள் அப்படிப்பட்ட புத்திமதிய காதுல வாங்காதவங்கலா தெரியிராங்க. அவங்க வாளுக்கும் பயப்டல... துப்பாக்கிக்கும் பயப்புடல. அதுக்கு பதிலா திருடர்கள பிடிக்க முயற்சி செஞ்சிருக்காங்க. அந்த அம்மா, மகளின் தைரியத்த பார்த்தா பாராட்டத்தான் செய்யனும். வீட்ல கொள்ளையடிச்ச கொள்ளையர்கள எந்த பயமும் இன்றி தாயும் மகளும் விரட்டி விரட்டி புரட்டி எடுத்துருக்காங்க...

ஹைதராபாத் பேகம்பேட்ல உள்ள ரசூல்புரா ஹவுசிங் காலனிலதான் இது நடந்தேரிருக்கு.  அந்த காலனில்ல ஆர்.கே.ஜெயின் என்ற தொழிலதிபர் வாழ்ந்துட்டு வராரு. இவருக்கு ஜீடிமெட்லா தொழிற்பேட்டைல ரப்பர் தொழிற்சாலை இருக்கு. இவரோட வீட்டுக்கு மார்ச் 21 மதியம் ஒன்றரை மணி போல 2 திருடர்கள் வந்தாங்க. அப்போ ஜெயின் மனைவி அமிதா மெஹத், அவரோட மகள் மற்றும் பணிப்பெண் மட்டுமே வீட்ல இருந்துருக்காங்க.

வேலைக்காரி சமையலறைல இருக்கப்போ, ஆர்.கே.ஜெயின் மனைவியும், மகளும் வேறு அறைல இருந்துருக்காங்க. அப்போ, ​கொரியர் டெலிவரி பன்றவர் போல நடிச்சு, இரண்டு ஆசாமிகளும் வீட்டுக்குள்ள வந்துருக்காங்க. வந்தவங்க சமையலறைல இருந்த வேலைக்காரிய பயமுறுத்த அவங்க பக்கத்துல துப்பாக்கியால சுட்ருக்காங்க. வேலைக்காரி சத்தமா கத்த, பக்கத்து அறையில இருந்த ஆர்கே ஜெயின் மனைவியும் அவரோட மகளும் வெளியே வந்துருக்காங்க. அப்போ மற்றொரு திருடன் கத்திய காட்டி மிரட்டீருக்காரு. அவங்க வீட்ல உள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்து குடுக்க சொல்லிருக்காங்க. இல்லன்ன கொலை செஞ்சிருவேன்னு மிரட்டிருக்காங்க.

கத்திய காட்டி மிரட்ன நபர், அந்த வீட்ல வேலை செஞ்ச பிரேம்சந்த்-ன்னு ஜெயினின் மனைவி அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்க. இதவச்சு பாக்குரப்போ, வீட்ல பெண்கள் மட்டும் இருக்கது தெரிஞ்சு தான் திருட வந்துருக்காங்கன்னு தெரியுது. கத்தி மற்றும் துப்பாகிய பாத்தும் தாயும் மகளும் பயப்படவே இல்ல. துப்பாக்கி வச்சிருந்தவர அவர்கள் 2 பேரும் தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுமட்டும் இல்ல... அவர் கைல இருந்த துப்பாக்கிய பிடுங்கி அதாலயே அடிச்சிருக்காங்க...

இதுக்கு இடைல அம்மா மற்றும் மகளின் அலறல் சத்தத்துல வீட்டுக்கு பக்கத்துல இருந்தவங்க வீட்டு முன்னாடி ஒன்னு கூடிட்டாங்க. கத்தி வச்சிருந்த 2வது நபரும் தப்பி ஓட try பன்னப்போ, தாயும் மகளும் அவரைப் பின்தொடர்ந்தாங்க. அப்பகுதியினர் உதவியோட அந்த 2ம் நபர் பிடிபட்டார். அப்பறம், போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, 2ம் நபர் கைது செய்யப்பட்டார்.

இதே போன்று துப்பாக்கிய காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடிய நபர வாராங்கல் மாவட்டம் காசிப்பேட்டை ரயில் நிலையத்துல வச்சி கைது செஞ்சுட்டாங்க. இந்த சம்பவத்த பேகம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செஞ்சு விசாரணை நடத்திட்டு வராங்க.

தாய் மற்றும் மகளின் வீரப் போராட்டம் ஜெயின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரால பதிவாகி இருக்கு. அந்த வீடியோ இப்போ வைரலாகி வருகிறது. அம்மா, மகளோட துணிச்சல பாத்து அவங்க தைரியத்த எல்லாரும் பாராட்டி வறாங்க.  துணிச்சலுடன் செயல்பட்ட அந்தப் பெண்களை, வடக்கு காவல் துணை ஆணையர் ரோகினி பிரியதர்ஷினி பாராட்டி இருக்காங்க.

இந்த விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.... ஐக்கிய நாட்டு அமைப்பின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டாரஸ், 2024-ம் ஆண்டு மகளிர் தினத்தன்று உலக கவனம் பெரும் கருத்து ஒன்னை முன்வச்சாரு. தற்போதைய நிலையின் படி, பெண்ணுரிமை பெருகினாலும் ஆண்-பெண் சமநிலை இன்னும் 300 ஆண்டுகள் தூரத்துல இருப்பதா சொன்னாரு. ஆனா அப்பப்போ பெண்கள் செய்யிற சாதனைகளும், அவங்க துணிச்சலோட செய்யிற பல காரியங்களும் சமநிலைய எட்ற நாள் வெகுதூரத்துல இல்லன்னு நமக்கு தெரியப்படுத்துது..

Tags :
Advertisement