For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை: 3 பேர் கைது!

04:55 PM Jun 06, 2024 IST | Web Editor
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய்  மகள் தற்கொலை  3 பேர் கைது
Advertisement

சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51). அச்சக தொழிலாளியான இவரது மனைவி ஞானபிரகாசி(48) பட்டாசுக்கான காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  இந்த தம்பதியரின் மகள் ஷர்மிளா( 24) எம்ஏ முதுகலை பட்டம் பெற்ற நிலையில் வரும் 9-ஆம் தேதி குரூப் 4 தேர்வு எழுத தயாராக இருந்தார்.  மகன் ஜெயசூர்யா(23) பொறியியல் பட்டப்படிப்பு படித்து ஓசூரில் பணிபுரிந்து வருகிறார்.

கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி  தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மற்றும் மருத்துவ செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் கூடிய வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடன் கொடுத்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கடன் தொகையை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இருவரின் பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே உயிரிழக்கும் முன்பாக ஷர்மிளா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அதில் கந்து வட்டி கேட்டு யார்யாரெல்லாம் தங்களை மன உளைச்சலாக்கியது என்ற
விவரத்தை எழுதி வைத்ததன் அடிப்படையில்,  ஆறுமுகம்( வயது 54),  ராஜகுமாரி( வயது 65), குருவம்மாள் (வயது 62) ஆகிய 3 பேர் மீது கந்துவட்டி மற்றும் தற்கொலைக்கு தூண்டியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் கந்துவட்டி கொடுமையால்
அரசு பள்ளி ஆசிரியர்களான லிங்கம் - பழனியம்மாள் தம்பதியினர் மகன், மகள்,
பேத்தியுடன் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி சிவகாசி
வட்டார பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்களிடையே அடங்குவதற்குள்,  தற்போது
மீனம்பட்டி கிராமத்தில் கந்து வட்டி கொடுமையால் தாயும்,  மகளும் தற்கொலை செய்து
கொண்ட சம்பவம் சிவகாசி வட்டாரத்தில் மீண்டும் பெரும் அதிர்ச்சியையும்
சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement