கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by ‘Newschecker'
2006 - ஆம் ஆண்டு வெளியான கொசு ஒழிப்பு ஸ்ப்ரே விளம்பர புகைப்படம் கங்கனா ரணாவத் அறையப்பட்ட விவகாரத்துடன் தவறாக இணைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
கங்கனா ரணாவத்தின் முகத்தில் அறைந்த அடையாளத்தின் புகைப்படம்.
கங்கனா ரணாவத் அறைந்த சர்ச்சை:
மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் டெல்லி புறப்படுவதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு கடந்த 06.06.2024 அன்று சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு வழக்கமான சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டதும் செய்திகளாக வெளிவந்தன.
டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா ரணாவத் தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கங்கனா ரணாவத் கன்னத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அறைந்த தடம் பாருங்கள் எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆனது.
உண்மை:
நியூஸ்செக்கர் தரப்பில் "கங்கனா ரணாவத் ஸ்லாப் போட்டோ" என்று தேடப்பட்டது. இது சம்பவம் குறித்த பல செய்தி அறிக்கைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றது. இருப்பினும், எந்த ஒரு கட்டுரையிலும் அத்தகைய புகைப்படம் இல்லை, இது எங்கள் சந்தேகத்தை எழுப்பியது.
தலைகீழ் படத் தேடலை நாங்கள் நடத்தினோம், இது விளம்பர பக்கத்திற்கு எங்களை இட்டுச் சென்றது. அதில் ஒரு பெண்ணின் முகம் அறைந்த அடையாளத்துடன் பெரிதாக்கிய புகைப்படம் உள்ளது. "ஸ்லாப் டூ' என்ற தலைப்பில் இந்த தொழில்முறை விளம்பரம் மே 30, 2006 அன்று வெளியிடப்பட்டது," என்று புகைப்படத்தின் தலைப்பைப் படிக்கவும். இது சர்வதேச பூச்சிக்கொல்லி பிராண்டான பேகோனின் கொசுவைக் கொல்லும் ஸ்ப்ரேக்கானது என்பதைக் குறிக்கிறது.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சமூக ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு வைரலாவது இந்த விளம்பர புகைப்படம் தான் என்பது உறுதியாகிறது.
மே 31, 2006 தேதியிட்ட இந்த Coolmarketingthoughts.com வலைப்பதிவு பகுதிக்கு மேலும் ஒரு தேடல் எங்களை அழைத்துச் சென்றது. அந்த விளம்பர பிரச்சாரத்தில், இது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றன. அதில், “கொசுவிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள ‘Baygon’ ஒரு சிறந்த தீர்வாகும். கொசுக்களை கொல்ல அறைந்து சோர்வாக இருந்தால் நீங்கள் எளிதாக உபயோகப்படுத்தக்கூடிய இந்த ஸ்பிரே கேன பயன்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.
முடிவு: பொய்
Note : This story was originally published by ‘Newschecker' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.