மாஸ்கோ தாக்குதல் : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்வு! 4 பேர் கைது!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக நேற்று மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை நோக்கி சுடத்தொடங்கினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அரங்கினை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் உண்டான தீப்பிழம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போர்க்களம் போல் காட்சி அளித்த அப்பகுதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி, தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.
Common Israel-America, have some courage and accept this coward act of terrorism #moscowattack #Moscow #RussiaisATerroistState pic.twitter.com/L014mflibm
— Healing Hands (@Dbatoorofficial) March 23, 2024
தாக்குதலில் வெளியான நெருப்பு மூலம் இசை அரங்கே கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் முதலில் 40 பேர் இறந்ததாக அறிவித்த நிலையில், இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பலியின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 140- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.