For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!!

10:29 AM Nov 08, 2023 IST | Web Editor
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்  முன்பதிவு தொடங்கியுள்ளது
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

Advertisement

தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கான சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க 12 வழித்தடங்களில்இந்த  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று, நாகர்கோவில் மங்களூர் எர்ணாகுளம் தன்பாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

நவம்பர் 9ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.மீண்டும் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் இரவு 11.15 மணிக்கு வந்தடைகிறது.

நவம்பர் 10, 17, 24 ஆகிய மூன்று நாட்கள் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மங்களூருக்கு மறு நாள் காலை 6.20 சென்றடைகிறது. இதே போன்று மங்களூரில் இருந்து தாம்பரத்திற்கு 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு 7, 14, 21 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போன்று பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 8, 15, 22, ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 9, 16, 23 ஆகிய மூன்று நாட்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னையை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 10, 17, 24 ஆகிய மூன்று நாட்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வேகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement