For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’ - போக்குவரத்து கழகம் தகவல்...

12:37 PM Feb 11, 2024 IST | Web Editor
‘கிளாம்பாக்கத்தில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது’   போக்குவரத்து கழகம் தகவல்
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், வழக்கத்தைவிட நேற்றைய தினம் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டது என தமிழ்நாடு போக்குவரத்துறை கழகம தெரிவித்துள்ளது.

Advertisement

கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்ல உரிய பேருந்துகள் இயக்கபடவில்லை  என பொதுமக்கள் இரண்டு நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது;

பிப்.10 ஆம் தேதி அன்று நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால் , பயணிகளின் தேவையை பூர்த்தி செய்திட கூடுதல் பேருந்துகள் பிற இடங்களிலிருந்து வரவழைக்க தேவைப்பட்ட கால அவகாசத்தில், பயணிகள் வந்தவாசி ,போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டனர்.

அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் பயணிகளிடம் உரிய பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றது என்று சமாதானம் செய்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பியது.

இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

பிப்.10 ஆம் தேதி அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதி காலை 3.30 மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கத்தினை சரி செய்தனர்.

என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement