For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் - விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!

06:38 AM Sep 28, 2024 IST | Web Editor
 containerlorryல் பணம் சிக்கிய விவகாரம்   விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்
Advertisement

நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர்.

Advertisement

நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல் 4 இரு சக்கர வாகனங்கள், ஒரு காரை இடித்தபடி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்றனர். காவல்துறையினர் தொடர்ந்து சென்றதால் கண்டெய்னரில் உள்ளவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல்கட்ட தகவலின் படி கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், சொகுசு கார் ஒன்றும் இருந்தது. கேரளா மாநிலம் திருசூரில் ஏடிஎம்மில் இருந்து ரூ.66 லட்சம் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றதாகவும் தகவல் வெளியாகியது.

அப்பகுதியைச் சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 7 பேர் இந்த கண்டெய்னர் லாரியில் இருந்துள்ளனர். ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட இந்த லாரியில் இருந்தவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அத்துடன், கண்டெய்னர் லாரியில் சிக்கியது ஏடிஎம்மில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் என்பது தெரியவந்தது. மேலும், போலீசாரால் பிடிக்கப்பட்டவர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர். தமிழ்நாடு மற்றும் கேரள போலீசாரை தொடர்ந்து ஆந்திர மாநில போலீசார் கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அத்துடன் மூன்று மாநில போலீசாரும் வெப்படை பகுதியில் முகமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :
Advertisement