Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'Money Heist' பாணியில் சாலையில் சிதறிய பணம் - அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

09:55 AM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய்
நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.  

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி - தேனி சாலையில் உள்ள மாமரத்துபட்டி பகுதியில் தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள்
சிதறி நெடுஞ்சாலையில் விழுந்தது.  இந்த 500 ரூபாய் நோட்டுகள் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையில் சிதறி கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் வாகங்களை நிறுத்தியும்,  அருகில் இருந்தவர்களும் அந்த நோட்டுகளை அள்ளிச் சென்றனர்.  இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 3 லட்சம் மதிப்பிலான இந்த 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக வந்த
இருசக்கர வாகனத்திலிருந்தோ, பேருந்திலிருந்தோ வீசப்பட்டதா? அல்லது தவறி கீழே
விழுந்ததா என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்
உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பணம் குறித்து யாரும் புகார் அளிக்காத சூழலில், புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளி செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என்ற
கேள்வியும் எழுந்துள்ளது.

Tags :
investigationMaduraiMoneyPoliceusilampatti
Advertisement
Next Article