Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு; நடிகர் மோகன்லாலின் உரிமம் ரத்து - கேரள உயர் நீதிமன்றம் அதிரடி..!

யானை தந்தம் வைத்திருப்பதற்கான நடிகர் மோகன்லாலுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
04:51 PM Oct 24, 2025 IST | Web Editor
யானை தந்தம் வைத்திருப்பதற்கான நடிகர் மோகன்லாலுக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Advertisement

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். கடந்த 2012 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள மோகன்லாலின் வீட்டில்  வனத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் யானை தந்தம் வைத்திருப்பதற்கான உரிமம் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

Advertisement

இதனையிடயே மோகன்லால் தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். மோகன்லாலில் கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அவருக்கு யானை தந்தம் வைத்திருப்பதற்கன உடைமைச் சான்றிதழை வழங்கியது.

ஆனால் இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் இறுதியில் கேரள நீதிமன்றம் மோகன்லாலுக்கு அளிக்கப்பட்ட யானை தந்தம் வைத்திருப்பதற்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2015-ல் உடைமைச் சான்றிதழ் வழங்கியபோது, அது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பதை சுட்டிக்கட்டிய நீதிமன்றம் மோகன்லாலின் உரிமத்தை செல்லாது உத்தரவிட்டுள்ளது.

 

Tags :
cinemanewsivorykeralahighcourtlatestNewsMohanlalmollywood
Advertisement
Next Article