யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட 'தீபாவளி'...!
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்புகளில் ஒன்று யுனெஸ்கோ ஆகும். இது கல்வி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் உள்ள உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவின் (ICH) 20ஆவது அமர்வானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த அமர்வு டிசம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த அமர்வுக்கு யுனெஸ்கோவிற்கான இந்திய தூதர் விஷால் வி. சர்மா தலைமை தாங்குகிறார். இந்த நிலையில் இந்தியாவில் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியானது யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொல்கத்தாவின் துர்கா பூஜை, ராம்லீலா நிகழ்ச்சி, கும்பமேளா உள்ளிட்ட 15 இந்திய மரபுகள் இந்த பட்டியலில் இருந்து வந்த நிலையில் தற்போது 16ஆவதாக தீபாவளி இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
🔴 BREAKING
New inscription on the #IntangibleHeritage List: Deepavali, #India🇮🇳.
Congratulations!https://t.co/xoL14QknFp #LivingHeritage pic.twitter.com/YUM7r6nUai
— UNESCO 🏛️ #Education #Sciences #Culture 🇺🇳 (@UNESCO) December 10, 2025