Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

03:50 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

“மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

Advertisement

இது தொடர்பாக தனது X தள (ட்விட்டர்) பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?  “பேச நா இரண்டுடையாய் போற்றி”  எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு,  ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Tags :
BJPCBICMO TamilNaduDMKEnforcement DirectorateIncome TaxMK StalinNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesPMO IndiaTamilNadu
Advertisement
Next Article