Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இன்னும் சில நாட்களில் மேடையிலேயே மோடி கண்ணீர் விட்டு அழக்கூடும்” - ராகுல் காந்தி!

12:36 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக ஒரு சிலரை கோடீஸ்வரராக்கும்.  ஆனால் காங்கிரஸ், கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்ப பெற்று ஏழைகளை லட்சாதிபதியாக்கும்” என தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்ற தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அ தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி,

வறுமை,  வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளை புறக்கணிக்க,  பிரதமர் மோடி பல்வேறு வழிகளில்,  பல்வேறு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து,  மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்.

தேர்தல் தொடங்கியதிலிருந்து மோடியின் பேச்சை கேளுங்கள்.  மிகவும் பதட்டமாக இருக்கிறார்.  இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விட்டு அழக்கூடும்.  மோடி உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்.  மிகவும் கவனமாக இருங்கள். சில சமயங்களில் அவர் சீனா,  பாகிஸ்தானைப் பற்றிகூட பேசுவார்.  பாஜக ஒருசிலரை கோடீஸ்வரராக்கும்.  ஆனால் காங்கிரஸ், கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்ப்பெற்று ஏழைகளை லட்சாதிபதியாக்கும்” என தெரிவித்தார்.

Tags :
BJPCongressElection2024Narendra modiParlimentary ElectionRahul gandhi
Advertisement
Next Article