Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோடி 3.0 | யார் யார் மத்திய அமைச்சர்கள்?

12:50 PM Jun 09, 2024 IST | Web Editor
Advertisement
நரேந்திர மோடி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய அமைச்சர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் பின்வரும் தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் இன்று அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் எம்பி களுக்கு தேநீர் விருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய விருந்தில் கலந்து கொள்பவர்களில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் தேநீர் விருந்தில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, சர்பானந்த் சோனோவால், சிவ்ராஜ்சிங் சவுகான், அமித்ஷா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Tags :
BJPNarendra modiprime minister
Advertisement
Next Article