For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோடி 3.0: மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு - முழுப் பட்டியல் இதோ!

08:33 PM Jun 10, 2024 IST | Web Editor
மோடி 3 0  மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு   முழுப் பட்டியல் இதோ
Advertisement

இன்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? விரிவாகப் பார்க்கலாம்.

Advertisement

மத்திய அமைச்சர்கள்:

1. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை அமைச்சர்

2. அமித்ஷா - உள்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர்

3. நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

4. ஜே.பி.நட்டா - சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

5. சிவராஜ் சிங் செளகான் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

6. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்

7. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை அமைச்சர்

8. மனோகர்லால் கட்டார் - மின்சாரத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்

9. குமாரசாமி - எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் 

10. பியூஷ் கோயல் - வர்த்தகத் துறை அமைச்சர்

11. தர்மேந்திர பிரதான் - கல்வித்துறை அமைச்சர்

12. ஜிதன்ராம் மாஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்

13. ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் - பஞ்சாயத்துராஜ், மீன், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்

14. சர்பானந்த சோனாவால் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்

15. வீரேந்திர குமார் - சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

16. ராம்மோகன் நாயுடு - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்

17. பிரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவினியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்

18. ஜூவல் ஓரம் - பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர்

19. கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை அமைச்சர்

20. அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 

21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா - தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர்

22. பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

23. கஜேந்திரசிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

24. அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

25. கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரத்துறை, சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர்

26. ஹர்தீப்சிங் பூரி - எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர்

27. மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

28. ஜி.கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்

29. சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழித்துறை அமைச்சர்

30. சி.ஆர்.பாட்டீல் - ஜல்சக்தி அமைச்சர்

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:

1. ராவ் இந்திரஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், திட்ட அமைச்சகம், கலாச்சாரத்துறை இணை அமைச்சர்

2. ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம், அனுசக்தி, விண்வெளித் துறை இணை அமைச்சர்

3. அர்ஜுன்ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரம் இணை அமைச்சர்

4. பிரதாப் ராவ் ஜாதவ் - ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலன் இணை அமைச்சர்

5. ஜெயந்த் சவுத்ரி - திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், கல்வித்துறை இணை அமைச்சர்

இணை அமைச்சர்கள்:

  1. ஜிதின் பிரசாதா - வர்த்தகம் மற்றும் தொழில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  2. ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் - மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
  3. பங்கஜ் செளத்ரி - நிதித்துறை 
  4. கிருஷ்ணன் பால் குர்ஜால் - கூட்டுறவுத்துறை
  5. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  6. ராம்நாத் தாஹூர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
  7. நித்யானந்த் ராய் - உள்துறை 
  8. அனுப்பிரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரத்துறை
  9. சோமண்ணா - ஜல்சக்தி, ரயில்வே அமைச்சகம்
  10. பெம்மசாணி சந்திரசேகர் - ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்புத் துறை
  11. எஸ்.பி.சிங் பாஹேல் -மீன், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை, பஞ்சாயத்துராஜ்
  12. ஷோபா கரந்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு
  13. கீர்த்தி வர்தன் சிங் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், வெளியுறவுத்துறை
  14. பி.எல்.வர்மா - நுகர்வோர், உணவு மற்றும் பொதுவிநியோகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  15. சாந்தனு தாக்கூர் - துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை
  16. சுரேஷ் கோபி - எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை
  17. எல்.முருகன் - தகவல் மற்றும் ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
  18. அஜய் டாம்டா - சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை
  19. பண்டி சஞ்சய்குமார் - உள்துறை
  20. கமலேஷ் பஸ்வான் - ஊரக வளர்ச்சித்துறை
  21. பஹீரத் செளத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
  22. சதீஷ் சந்திர துபே - நிலக்கரி, சுரங்கத்துறை
  23. சஞ்சய் சேட் - பாதுகாப்புத்துறை
  24. ரவ்ணீத் சிங் -  உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை, ரயில்வே
  25. துர்காதாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரங்கள் துறை 
  26. ரக்சா நிகில் கட்சே - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
  27. சுகந்த மஜும்தார் - கல்வி, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை
  28. சாவித்ரி தாக்கூர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
  29. டோகான் சாஹு - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை
  30. ராஜ்பூஷன் செளத்ரி - ஜல்சக்தித் துறை
  31. பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா - எஃகு மற்றும் கனரக தொழில்துறை
  32. ஹர்ஸ் மல்ஹோத்ரா - பெருநிறுவன விவகாரங்கள் துறை, சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை
  33. நிமுபென் பாம்பனியா - நுகர்வோர், உணவு மற்றும் பொதுவினியோகத் துறை, 
  34. முரளிதர் மொஹோல் - கூட்டுறவுத் துறை, விமானப்போக்குவரத்துத் துறை
  35. ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை, மீன், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை
  36. பபித்ரா மார்கரீட்டா - வெளியுறவுத்துறை, ஜவுளித்துறை
Tags :
Advertisement