#MNM | மநீம பொதுக்கூழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!
01:20 PM Sep 21, 2024 IST | Web Editor
Advertisement
மநீம 2-வது பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் குறித்து காணலாம்.
Advertisement
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அத்துடன் கட்சி நிர்வாகிகள், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2570 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முதல் பொதுக் குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுபோன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!
- பொதுக்குழுவில் மீண்டும் நிரந்தர தலைவராக கமலஹாசன் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்.
- தேசிய வளர்ச்சிக்காக வரி செலுத்துவதில் மாநிலங்களுக்கு பங்கு முக்கியம்
- தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை ஒன்றிய அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும்
- வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு 50 சதவீத லாபத்தை கொடுக்கும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முயற்சி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- குறைந்தபட்சம் ஒரு பூத்திற்க்கு ஐந்து பேர் நியமிக்க வேண்டும்.
- எம்.எஸ். சுவாமிநாதன் கூறியதன் அடிப்படையில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப் பூர்வமாக நிர்ணயிக்க வேண்டும்.
- மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடை படையினர் கைது செய்வது, அவரது படகுகளை பறிமுதல் செய்வது, நெடு நாட்கள் சிறையில் சித்திரவதை செய்வது, மொட்டை அடிப்பது, அவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது போன்ற அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறோம். இனியும் அனுமதிக்க முடியாது. உடனடியாக அதைத் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும்.
- கிராம சபை என்பது உள்ளூர் அரசாங்கம் போன்றது. கிராமசபையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
- நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்வது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
- அழகான மாளிகையை இடித்துவிட்டு குட்டிச் சுவர் எழுப்புவது தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல். மாநிலக் கட்சிகளின் தேவையை இல்லாமல் ஆக்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
- இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
- வேலையின்மை, பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை வழங்க வேண்டும். அதன் மூலம் தேவைப்படுவோருக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்.
- உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதற்காக தமிழக அரசையும், தமிழக மக்களையும் பாராட்டுகிறோம். மக்கள் நிதி மய்யம், மோகன் பவுண்டேஷன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர், விரைவில் அந்த எண்ணிக்கை 10,000 ஆக உயர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு சட்டமன்றத்திலும் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் 5 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது.
- மநீம கட்சியின் புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில நிர்வாகக் குழுஉறுப்பினர்களாக தேர்வானவர்கள், அர்ப்பணிப்புடன் உழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களது பணி சிறக்க இந்த பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.