For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரள அரசின் குழுவில் இருந்து எம்எல்ஏவும் நடிகருமான #Mukesh நீக்கம்!

06:32 PM Aug 28, 2024 IST | Web Editor
கேரள அரசின் குழுவில் இருந்து எம்எல்ஏவும் நடிகருமான  mukesh நீக்கம்
Advertisement

‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், கேரள அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கேரள அரசு சார்பில் கேரள படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்ற வகையில் கொள்கை வகுப்பதற்காக, கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இதில், நடிகரும் கொல்லம் சட்டப்பேரவை உறுப்பினருமான முகேஷ், மஞ்சு வாரியர், பத்மபிரியா, நிகிலா விமல் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகர்கள் மீது நடிகையொருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நடிகையின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கொல்லத்தில் உள்ள முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி சென்றனர்.

முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். இதுதொடர்பாக முகேஷ் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனிடையே, கேரளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார்கள் எழுந்ததை அடுத்து நடிகர் மோகன்லால் தலைமையிலான திரைப்பட சங்க நிர்வாகிகள் குழு நேற்று (ஆக. 27) கூண்டோடு ராஜிநாமா செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்புதற்கான கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல், பாலியல் தொந்தரவு தரப்படுவதாக எழுந்த புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக கேரள அரசு ஆக. 25-ம் தேதி அமைத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட 8 பேர் மீது தனது புகார் தொடர்பான விவரங்களை நடிகை அளித்துள்ளார். இதுவரை 17 பேர் மீது புகார்கள் வந்துள்ளன.

Tags :
Advertisement