For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin மீண்டும் கடிதம்!

01:06 PM Sep 23, 2024 IST | Web Editor
தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம்   வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  mkstalin மீண்டும் கடிதம்
Advertisement

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21ம் தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகின்றன. அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் : ஒரே ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் 97% வழக்குகள் 13 மாநிலங்களில் பதிவு! முதலிடத்தில் #UttarPradesh!

எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளகிறேன். மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளகிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்தார்.

Tags :
Advertisement