For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

12:50 PM May 23, 2024 IST | Web Editor
 மு க ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்    ஈ வி கே எஸ் இளங்கோவன்
Advertisement

"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்"  என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

"இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை கடவுள் கொடுத்த வரமாக நான் பிறந்துள்ளேன் என பிரதமர் மோடி பேசி உள்ளார்.  பிரதமர் மோடி தரமற்ற நிலக்கரியை கொடுத்து ரூ.6000 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.  காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறி வந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார்.

பிரம்மானந்தா,  நித்தியானந்தா தொடர்ந்து மோசடி செய்து வந்த நிலையில் அந்த வரிசையில் அடுத்து மோடி இடம் பெற்றுள்ளார்.  இந்த தேர்தலில் உறுதியாக அவர் வெற்றி பெற மாட்டார்.  ஆரம்பத்தில் இருந்து தமிழர்களை வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.  தமிழர்களை நம்ப வைக்க வேண்டும் என வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்.  டெபாசிட் வாங்கும் அளவிற்கு இருந்த பாஜக கட்சி தற்போது அண்ணாமலையை தமிழ்நாடு மாநில தலைவராக நியமித்ததால் டெபாசிட் கூட வாங்காது.

இதையும் படியுங்கள் : “டிஜிட்டல் பொருளாதாரம்” – பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!

காமராஜர் கொடுத்த நல்லாட்சி போல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.  காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி நல்ல ஆட்சி,  மு.க. ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்"

இவ்வாறு ஈ.வி.கேஎஸ். இளங்கோவன் கூறினார்.

Tags :
Advertisement