For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

10:08 PM Dec 01, 2023 IST | Web Editor
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு
Advertisement

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இம்மாநிலங்களில் மிசோரமின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மிசோரமில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, 75.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.  மேலும் காங்கிரஸ்,  பாஜகவுக்கு முறையே 3வது மற்றும் 4வது இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (டிச.3) எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை மட்டும் வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால்,  டிச.3-ம் தேதி நடைபெற இருந்த வாக்கு எண்ணிக்கையை வேறொரு நாளுக்கு மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனாலேயே மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Tags :
Advertisement