For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிசோரம் தேர்தல் : ஆட்சியை இழக்கும் ஜோரம்தங்கா..! - 10:30 மணி முன்னிலை நிலவரம்.!

10:51 AM Dec 04, 2023 IST | Web Editor
மிசோரம் தேர்தல்   ஆட்சியை இழக்கும் ஜோரம்தங்கா      10 30 மணி முன்னிலை நிலவரம்
Advertisement

மிசோரம் தேர்தலில் காலை 10:30 மணி நிலவரப்படி  ஜோரம்தங்கா மிசோ தேசிய முன்னணி சொற்ப இடங்களையே பெற்று ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

மிசோரம் மாநிலத்தின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ.7-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மிசோரமில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, 75.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Res

இந்த தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் காங்கிரஸ்,  பாஜகவுக்கு முறையே 3வது மற்றும் 4வது இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியாகின.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3 எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால் வேறொரு நாளுக்கு மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனாலேயே மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

காலை 10:30 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் : 

  • ஜோரம் மக்கள் இயக்கம் - 29
  • மிசோ தேசிய முன்னணி - 7
  • பாஜக - 3
  • காங்கிரஸ் - 1

தேர்தல் முன்னிலை நிலவரங்களின்படி ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி குறைவான இடங்களை பெற்று ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. எதிர்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement