For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் - ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

09:58 PM Dec 04, 2023 IST | Web Editor
மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்   ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது
Advertisement

மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களை அள்ளியது. இதையடுத்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது.

இவ்வியகத்தின் தலைவரான 74 வயது லால்துஹோமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் 1982 களில் முன்னாள் பிரதமர் இந்திரா பாதுகாவலராக பணியாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒய்வு பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜோரம் மக்கள் இயக்கத்தினை துவக்கி மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கட்சியாக வளர்த்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Tags :
Advertisement