MIvsSRH | அவுட்டா? இல்லையா? - விவாதங்களை கிளப்பிய நடுவரின் முடிவு!
2025 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை இன்று(ஏப்ரல்.23) எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதன்படி டிரெண்ட் போல்ட்டிடம் டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாக தொடர்ந்து, அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல் தீபக் சஹாரிடம் இஷான் கிஷன் 1 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை தீபக் சஹார் வீசியபோது இஷான் கிஷன் அவுட்டானது விவாதங்களை கிளப்பியுள்ளது. தீபக் சஹார் வீசிய பந்து இஷான் கிஷனுக்கு லெக் சைடில் சென்று கீப்பரின் கைக்கு சென்றது. இதையடுத்து நடுவர் தயங்கி தயங்கி அவுட் கொடுத்தார். அதன் பின்பு இஷான் கிஷன் அவுட்டானதை ஒலி அதிர்வெண்களைப் பயன்படுத்தி மூன்றாம் நடுவர்கள் காட்சிபடுத்தியபோது பேட்டில் பந்து படாமல் இருந்தது.
இது குறித்து சமூக வலைத்தளங்கள் கிரிக்கெட் ரசிகர்கள், பந்தும் பேட்டில் படவில்லை, மும்பை அணியில் யாரும் அவுட் என்றும் அப்பீல் செய்யவும் இல்லை. ஆனால், நடுவர் ஏன் அவுட் கொடுத்தார்? என்ற கேள்விகளை முன்வைத்து விவாதம் செய்து வருகின்றனர்.