For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

MIvsRR | பவுலர்களை பந்தாடிய பல்தான்ஸ் - ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 218 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
09:32 PM May 01, 2025 IST | Web Editor
ராஜஸ்தான் அணிக்கு எதிராக 218 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
mivsrr   பவுலர்களை பந்தாடிய பல்தான்ஸ்   ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு
Advertisement

2026 ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், ரியான் பராக் தலையிலான ராஜஸ்தான் அணி, ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை இன்று(மே.1) எதிர்கொண்டு வருகிறது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இவர்களது பார்ட்னர்ஷிப் 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. அந்தளவிற்கு பவர்பிளேவில் ராஜஸ்தான் பவுலர்களை இருவரும் பந்தாடினர். அதன் பின்னர், ரியான் ரிக்கல்டன் 61 ரன்களுடன் மஹிஷ் தீக்ஷனாவிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து  ரியான் பராக்கிடம் 53 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்த பார்ட்னர்ஷிப்-க்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இணைந்து அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இதன் மூலம் இருவரும் தலா 48* ரன்களை அடித்து அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து 218 என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி சேஸிங் செய்ய உள்ளது.

Tags :
Advertisement