#MIvsRR : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி குவித்தது.
டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் ரோகித் சர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ் ஆகியோர் கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. டிரென்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் நந்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும் அவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.