MIvsGT | டாஸ் வென்ற குஜராத் - மும்பை அணி பேட்டிங்!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, சும்பன் கில் தலைமையிலான குஜராத் அணியை இன்று(மே.06) எதிர்கொள்ளவுள்ளது. மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
அதே போல் குஜராத் அணி 10 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டாஸை வென்ற குஜராத அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி பிளேயிங் லெவன் :
ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
குஜராத் அணி பிளேயிங் லெவன் :
சுப்மான் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.